"தமிழ்நாட்டில் கோடைகால சுற்றுலா - மலைகளும் நீர்வீழ்ச்சிகளும்"
அறிமுகம் :
நமது தமிழ்நாட்டில் கோடைகாலங்களில் பெரும்பாலும் மக்கள் வேலை செய்துவிட்டு விடுமுறை நாட்களிலும் தங்களது வீட்டிலேயே தங்களது நேரங்களை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டில் கோடை காலங்களில் நீங்கள் டிவி பார்ப்பது மொபைல் பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் கோடைகாலத்தில் நீங்கள் குறைந்த செலவில் சுற்றி பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.
நீங்கள் உங்களுடைய பொன்னான நேரங்களை கோடை காலங்களில் நீங்கள் அங்கு போய் செலவழித்தால் உங்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கும். எனவே கோடை காலங்களில் தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க கூடிய சில அற்புதமான இடங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுலா இடங்கள்:
ஊட்டி:
- தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி பகுதியானது மலைகளின் ராணி என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியானது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இதனுடைய உயரமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2240 மீட்டர் ஆகும்.
- இந்த ஊட்டி பகுதி எனது மிகவும் குளிர்ந்த கால நிலை மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மேலும் இங்குள்ள இயற்கை பகுதிகளானது பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தில் இருக்கின்றன.
- மேலும் ஊட்டியில் உள்ள ஏரிகள் அங்குள்ள பூங்காக்கள் மற்றும் ரோஜா தோட்டங்கள் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் மலர்கண்காட்சி மிகவும் அற்புதமாக இந்த ஊட்டி பகுதியில் இருக்கிறது.
ஊட்டியின் சிறப்புகள்:
- ஊட்டி ஏரி-இந்த ஊட்டி பகுதியில் உள்ள ஏரிகள் ஆனது மிகவும் படகு சவாரிக்கு பிரபலமான இடமாக இருந்து வருகிறது. கோடைகாலங்களில் நீங்கள் இங்கு சென்று படகு சவாரி செய்யும்போது உங்களை சுற்றி மிகவும் இயற்கை காற்று மற்றும் இயற்கை அழகுகள் போன்றவற்றை ரசித்துக்கொண்டே படகு சவாரி செய்யலாம்.
- பூங்காக்கள்-ஊட்டி பகுதியில் உள்ள பூங்காக்கள் மிகவும் வண்ணமயமான மலர்கள் மற்றும் அங்குள்ள இயற்கை பகுதிகள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக அழகாக இருக்கும்.
- நீலகிரி ரயில்-நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையம் ஆனது என ஸ்கோர் பாரம்பரிய பட்டியலில் உள்ள மலைப்பகுதியில் செல்லக்கூடிய ரயிலாகும்.
- இந்த மலைப்பகுதி இடையில் செல்லக்கூடிய ரயில் பயணமானது சுற்றியுள்ள இயற்கை வளங்கள் மற்றும் சுற்றமான காற்று போன்றவைகள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் ஒருமுறையாவது நீலகிரி சென்றால் இந்த ரயிலில் பயணம் செய்து பாருங்கள்.
- அழகிய தேயிலைத் தோட்டங்கள்-ஊட்டியில் உள்ள தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும் புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்களுக்கு ஏற்ற இடம் ஆகும் இந்த செயலைத் தோட்டங்கள் மேலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இங்கு தேயிலைத் தோட்டங்களானது மிகவும் அழகாக இருக்கும்.
கொடைக்கானல்:
- இந்த கொடைக்கானலானது மலைகளின் இளவரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறது.
- இந்த கொடைக்கானல் ஆனது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இதனுடைய உயரமானது சுமார் 2133 மீட்டர் இருக்கின்றன.
- இங்குள்ள கொடைக்கானல் ஏறி குறிஞ்சி மலர்கள் மற்றும் குளிர்ந்த வானிலை போன்றவை மக்கள் அனைவரும் விரும்பும் இடமாக இருந்து வருகின்றன.
- கொடைக்கானல் ஏரி-கொடைக்கானல் ஏறியானது நட்சத்திர வடிவில் இருக்கின்றன. மேலும் இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
- பேரிஜம் ஏரி-கொடைக்கானல் பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அமைதியை விரும்பும் நபர்கள் இங்கு சென்று உங்கள் நேரங்களை செலவிடலாம்.
- தேவாரு வனப்பகுதி-இந்த வனப்பகுதியானது நூற்றுக்கணக்கான தேவார மரங்களை கொண்டுள்ளது.
- மேலும் இங்குள்ள குணா குகையானது மர்மங்கள் நிறைந்துள்ள குகை பகுதியாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் பல்வேறு வகையான இயற்கை சுற்றுலா இடங்கள் இருக்கின்றன.
- நீங்கள் மார்ச் முதல் மே மாதம் மற்றும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் சென்று சுற்றி பார்ப்பதற்கு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
ஏற்காடு:
ஏற்காடு ஆனது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏற்காடு ஆனது இயற்கை வளங்கள் நிறைந்து மற்றும் இயற்கை காற்றுகள் மேலும் இங்கு பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் இருக்கின்றன.
வால்பாறை:
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள வால்பாறை தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு அழகான மலைப் பிரதேசம்.
கொல்லிமலை:
இந்தக் கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த மலைப்பகுதியில் செல்லும் வளைவுகளும் இயற்கை அழகும் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும்.
மேகமலை:
மேகமலையானது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடமாகும். மேலும் இது மேகங்களின் மழை என்றும் அழைக்கப்படுகிறது.
குன்னூர்:
ஊட்டி பகுதியில் அருகில் உள்ள இந்த இடமானது தேயிலை தோட்டங்கள் மற்றும் இயற்கை அழகுகளை ரசிப்பதற்கு ஏற்ற இடமாக அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் கோடை காலங்களில் சுற்றிப் பார்க்கக் கூடிய அற்புதமான நீர்வீழ்ச்சி பகுதிகள்:
குற்றாலம்:
நீங்கள் ஒரு முறை குற்றாலத்திற்கு கோடை காலங்களில் சென்றால் மிகவும் நல்ல அனுபவத்தை அந்த இடமானது உங்களுக்கு வழங்குகிறது. குற்றாலம் நீர்வீழ்ச்சியானது மூலிகை நேராக அறியப்படுகிறது. நீங்கள் ஒரு முறையாவது குற்றாலத்திற்கு சென்று ஒரு அனுபவத்தை பெற்று வாருங்கள்.
கோயம்புத்தூர் பகுதியில் உள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சி:
கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியானது கோடை காலங்களில் போய் வெப்பத்தை தணிப்பதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.
சுருளி அருவி:
இந்த சுருளி அருமையானது தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான அருவியாகும். மேலும் நீங்கள் இங்கு சென்றால் ஆன்மீகம் மற்றும் இயற்கை அழகு இரண்டையும் பார்த்துக்கொண்டு வரலாம்.
திற்பரப்பு அருவி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அருமையானது அமைந்துள்ளது. மேலும் இங்கு நீர்வீழ்ச்சிகள் படகு சவாரிகள் என்று பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
சிறந்த பயண நேரங்கள்:
பொதுவாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த கோடை காலம் நீடிக்கிறது. இந்த காலங்களில் சமவெளி பகுதியில் அதிக வெப்பம் நிலவுகின்றன. எனவே நீங்கள் வெப்பத்தை தவிர்த்து பல்வேறு கோடைகால சுற்றுலா இடங்களுக்கு செல்ல விரும்புவீர்கள். அதற்கான நேரங்கள்.
மார்ச் முதல் ஏப்ரல்:
மே :
ஜூன்:
இந்த மாதம் ஆனது கோடை காலத்தின் இறுதி மாதமாகும். மழைக்காலம் இங்கிருந்து ஆரம்பிக்கிறது. சில நேரங்களில் ஜூன் மாதங்களில் கூட மழை வருகிறது. அப்படி இருந்தாலும் பசுமையான மலைகள் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றால் இந்த ஜூன் மாதமும் பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். எனவே கோடைகாலங்களில் நீங்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பாக சரியான முறையில் திட்டமிட்டு அதனை செயல்படுத்தி மிகவும் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
என்னுடைய பயண அனுபவம்:
என்னுடைய பெயர் கார்த்திக் நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியந்தல் என்னும் சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் முதன் முதலில் கோடைகாலத்தில் சுற்றி பார்த்த இடத்தைப் பற்றி மற்றும் என்னுடைய பயண அனுபவத்தை பற்றி இந்தப் பதிவில் கூறுகிறேன்.
தர்மபுரி மாவட்டம்:
- நான் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் என்னும் காவிரி ஆற்றின் நீர்வீழ்ச்சிக்கு தான் கோடைகாலத்தில் ஒரு முறை சென்றிருந்தேன். முதலில் நான் எங்கள் ஊரிலிருந்து எனக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கள் திருவண்ணாமலை ஊரிலிருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு சென்றிருந்தேன்.
- தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஒகேனக்கல் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்று நான் அங்கிருந்து ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்றேன். நான் பேருந்தில் இருந்து ஒகேனக்கல் இறங்கியதும் அங்கு அதிகளவில் கடைகள் மற்றும் துணிக்கடைகள் என பல்வேறு கடைகள் இருந்தன. உணவு செய்வதற்காக மற்றும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்கும் இடம் வசதி மற்றும் உணவு வசதி போன்ற வசதிகள் அங்கு சிறப்பாக இருக்கின்றன.
- உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் சென்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி சுற்றி பார்த்துவிட்டு உங்களுக்கு மிகவும் களைப்பாக இருந்தால் நீங்கள் தங்கி விட்டு வருவதற்கும் போதுமான வசதிகள் இருக்கின்றன.
- இந்த பயணம் ஆனது எனக்கு மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்களும் ஒருமுறை தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பாருங்கள். அந்த நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அவர்கள் சமைத்து கொடுக்கும் மீன் மற்றும் சாப்பாடு போன்றவை மிகவும் அற்புதமாக செய்து தரப்படுகின்றன.
